ஏமாற்றாதே.. ஏமாறாதே - கான் சிட்டி டிரெய்லர் ரிலீஸ்!

நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ஏமாற்றாதே.. ஏமாறாதே - கான் சிட்டி டிரெய்லர் ரிலீஸ்!
Published on

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’

படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக “கான் சிட்டி” உருவாகியுள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஷான் ரோல்டன் இசையில் உருவான பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்த நிலையில், ‘கான் சிட்டி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என தெரிகிறது.

வருகிற 26-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com