ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்த ‘தி ஒடிசி'

தி ஒடிசி திரைப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
the odyessy
Published on

புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ' தி ஒடிசி' திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது.

மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'தி ஒடிசி' திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.20.76 கோடி மொத்த வசூலையும், ரூ.17.40 கோடி நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அசுரத்தனமான வரவேற்பை இந்த வசூல் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்

இந்திய அளவில் இந்தத் திரைப்படம் சராசரியாக 48.7% திரையரங்கு ஆக்குபென்சியுடன் இயங்கியது. குறிப்பாக, கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களைப் போலவே, இதற்கும் ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாண திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றன.

தமிழகத்தில் மிரட்டலான வரவேற்பு

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நோலனின் படங்களுக்கு எப்போதும் தனி இடமுண்டு. அதற்கேற்ப தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மிரட்டலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தத் திரைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 8,413-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ள 'தி ஒடிசி', ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், தி ஒடிசி படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. உலக அளவில் 3 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது என வார்னர் ப்ரோஸ் இந்தியா என்ற வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com