

இசையமைப்பிலார் ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே காரில் நண்பர்களுடன் அமீன் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து பார்கவ் என்ற நண்பருடன் அமீன் வந்த சொகுசு கார் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஏஆர் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 வயது நிரம்பிய ஏஆர் அமீன் சிறுவயதிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமானார். ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.