பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் புதிய பட அப்டேட்

இப்படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் இரண்டு சண்டைக்காட்சிகளும் இடம்பெறுகிறது.
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் புதிய பட அப்டேட்
Published on

மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும், அம்மனிதனை நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக் கருத்தைக் கொண்டு உருவாகி வரும் படம் கொடூரா.

யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வா வரலாம் வா, ஃபயர் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் வில்லனாக இலியாஸ் நடிக்க வாழை ஜானகி அம்மாள், பேபி தீக்ஷிதா சந்தோஷ் குமார், தாய்க்கிழவி புகழ் முத்துக்குமார், பிக்பாஸ் அரோரா, டி.எம் கார்த்திக், திருக்குறளி மற்றும் டாக்டர்.திவாகர் ஆகியோர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு பணிகளை விஜய் வெங்கட் மேற்கொள்ள சௌகத் அலி இசையமைக்க பாடல்களை வ. கருப்பன் எழுதியுள்ளார். ஸ்டண்ட் பணிகளை ஸ்பீடு மோகன் மேற்கொள்ள தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக தஷிகிரண், தயாரிப்பு நிர்வாகியாக வம்சி கிருஷ்ணா பணியாற்றியுள்ளார்.

யாஸ் எண்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசன எழுதி ஆர்.சார்லஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்கால், தரங்கம்பாடி போன்ற இடங்களில் இடைவிடாது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் இரண்டு சண்டைக்காட்சிகளும் இடம்பெறுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com