நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தேனி புறப்பட்டது பாரதிராஜாவின் உடல்

நாளை (ஜூன்.11) பிற்பகல் 3 மணி அளவில் பாரதிராஜா உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.
நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தேனி புறப்பட்டது பாரதிராஜாவின் உடல்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும், நடிகருமான பாரதிராஜாவின் உயிர் இன்று காலை பிரிந்தது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலகுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசு மரியாதை:

தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து நாளை (ஜூன்.11) பிற்பகல் 3 மணி அளவில் பாரதிராஜா உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

இன்று காலை தொடங்கி இரவு 9 மணி வரை இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் பூத உடல் அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com