இயக்குநர் முத்தையா மகனுக்கு வில்லனாகும் பரத்

கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையாஅடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
இயக்குநர் முத்தையா மகனுக்கு வில்லனாகும் பரத்
Published on

கிராமத்து பின்னணியுடைய படங்கள் மிகவும் அரிதாகி விட்டன. இதை எடுக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே எனலாம். கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன்,குட்டி புலி,விருமன், போன்ற படங்களே இதற்கு சாட்சி.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பனும்,விருமனும் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்து வெளியான 'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் பரத் வில்லனாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்கள் நடித்தும் பரத்திற்கு எந்த நல்ல படமும் அமையவில்லை. முத்தையா படத்தில் வரும் வில்லனுக்கு எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.

அதனால் நல்ல கிராமத்து பின்னணியில் அமையவுள்ள இப்படத்தில் பரத்திற்கு நல்ல கம் பேக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com