சென்னையில் 'எட் ஷீரான்' இசை நிகழ்ச்சி.. சர்பிரைஸ் கொடுக்கப் போகும் சிறப்பு விருந்தினர் - யார் தெரியுமா?

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இசை நிகழ்ச்சிக்கும் வரும் பார்வையாளர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 'எட் ஷீரான்' இசை நிகழ்ச்சி.. சர்பிரைஸ் கொடுக்கப் போகும் சிறப்பு விருந்தினர் - யார் தெரியுமா?
Published on

உலகளவில் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளரான எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பயணம் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

அந்தவகையில் கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார். அது இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த இசை நிகழ்ச்சியில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதனை தொடர்ந்து இந்தியாவில் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர்.

அதன்படி, கடந்த வாரம் முதல் இந்தியாவின் ஆறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் பயணத்தை எட் ஷீரான் தொடங்கினார். முதற்கட்டமாக பூனேவில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்கும் வரும் பார்வையாளர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் நடைபெறும் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, இந்த இசை நிகழ்ச்சிகாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானையும், அவரது மகன் ஏ.ஆர். அமீனையும் எட் ஷீரன் சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மற்றொரு புகைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் போது எட் ஷீரன் புகைப்படம் எடுக்கிறார். மேலும் எட் ஷீரன் குழு சென்னையில் முகாமிட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com