ஜோக் அடிக்கிறீங்களா... கோர்ட்ல கேஸ் போடுவேன்: புஷ்பா 2 படக்குழுவை மிரட்டிய ரசிகர்

புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜோக் அடிக்கிறீங்களா... கோர்ட்ல கேஸ் போடுவேன்: புஷ்பா 2 படக்குழுவை மிரட்டிய ரசிகர்
Published on

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து தள்ளிப் போய் வருவதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் புஷ்பா 2 படக்குழுவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், " எதற்காக புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது. படக்குழு ஜோக் அடிக்கிறதா? நீங்கள் ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறீர்கள். புஷ்பா கம்யூனிட்டியை சேர்ந்த நான் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்" என்று மிரட்டியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com