கல்யாணத்துக்கு அறந்தாங்கி நிஷா மாதிரி பொண்ணு வேணும்!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அறந்தாங்கி நிஷா தற்போது பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கல்யாணத்துக்கு அறந்தாங்கி நிஷா மாதிரி பொண்ணு வேணும்!
Published on

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் மேடை பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நகைச்சுவை நடிகை ஆவார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளாமே உள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த அறந்தாங்கி நிஷா, குடும்பத்தில் நிலவும் கணவர்-மனைவி, மாமியார்-மருமகள் சண்டைகளை நகைச்சுவை உணர்வுடன் சொல்லக்கூடியவர். மேலும் எந்த ஒரு துறையிலும் சாதிப்பதற்கு நிறம் ஒரு தடை இல்லை என்பதை தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துள்ளவர். இதனிடையே, தன்னால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடியவர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அறந்தாங்கி நிஷா தற்போது பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓட்டல் ஒன்றில் உணவருந்த சென்ற நிஷா அங்கு பணிபுரியும் பெண்ணிடம் கலந்துரையாடியுள்ளார். அப்போது, வீடியோவில் பேசும் பெண்மணி, ஐயரிடம் பையனுக்கு திருமணத்திற்காக ஜாதகம் பார்க்க சென்றேன். ஐயர் என்னிடம் கேட்டார் பொண்ணு சினேகா, திரிஷா, நிரோஷா மாதிரி வேணுமான்னு. நான் சொன்னேன். அவங்கள்ளாம் கிடைக்க மாட்டாங்க. பொண்ணே கிடைக்காத சமயத்தில் அறந்தாங்கி நிஷா மாதிரி கிடைத்தா போதும் ஐயரே என்றேன் என்றார்.

அதற்கு நிஷா, பொண்ணு கிடைத்ததா? என்று கேட்க பொண்ணு கிடைத்து இப்போ 2 குழந்தைங்க இருக்காங்க என்று அப்பெண்மணி கூற, அந்த பொண்ணு யார் மாதிரி என்று நிஷா கேட்க... அப்படியே நிஷா மாதிரியே இருக்கு. அதான் கொடுமையே என்று அப்பெண்மணி கூற பிச்சிபுடுவேன் என்று நிஷா சிரித்தப்படியே கூற... அப்போ நீங்களும் என் மாமியார் மாதிரியே என்று நிஷா கூற, அப்பெண்மணி இல்ல நாங்க ப்ரெண்டு மாதிரி என்று கூறுகிறார்.

கலகலப்பான இந்த வீடியோவை அறந்தாங்கி நிஷா, ‘என்னமாதிரி கிடைச்சா கொடுமையம் ஹய்யோ, எனக்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட போகும் போது இவங்க ரொம்ப அழகா இந்த விஷயத்தை சொன்னாங்க...’ என்று கூறி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com