

2017-ம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம், 'அறம்'. சமூக அக்கறை மிக்க கதைக்களத்துடன் உருவான இந்த படம், குடிநீர் பிரச்சனை, ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் முயற்சிகள் மற்றும் அதில் ஏற்படும் அரசியல் குறுக்கீடுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டு குவிந்தன. 'அறம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் பதில் அளித்துள்ளார்.
'அறம்-2' படத்துக்கான கதை முழுமையாக தயாராகி விட்டது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பற்றவைத்திருக்கிறது.