விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் அறிவிப்பு!

படம் ஆக.14ம் தேதி வெளியாக உள்ளது.
விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் அறிவிப்பு!
Published on

விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார்.

ஆக்ஷன் என்டர்டெயிணராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தனது 99வது படமாக இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com