ஒரு ட்விட்டுக்கு இரண்டாயிரம், ஒரு ரீல்சுக்கு நான்காயிரம் என்ற போக்கை நிறுத்துங்கள்: அனிருத் ரவிச்சந்தர்

‘அரவிந்த்’ பாடலின் வரிகள் மூலம் பணம் பெற்றுக்கோண்டு செய்யப்படும் செயற்கையான பரப்புரைகளை அனிருத் விமர்சனம் செய்தார்.
Anirudh Slams Paid Promotions
Published on

தமிழில் ஜெயிலர் திரைப்படத்தின் பிரபலமான 'ஹுகும்' பாடலில் பாடலாசிரியர் சூப்பர் சுப்புவுடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் பணியாற்றினார்.

இதையடுத்து நேற்று வெளியான ‘அரவிந்த்’ என்ற தனிப்பாடலை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு-வுடன் மீண்டும் இணைந்து இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் பணம் பெற்றுக்கோண்டு செய்யப்படும் செயற்கையான விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளை இசையமைப்பாளர் அனிருத் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த பாடல் உருவான பின்னணி கதையை சமீபத்திய உரையாடலில் அனிருத் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “எனது ஈகோவை மாற்றிய ஆளுமையாகவும், இப்போது என்னுடன் இல்லாத என் சிறந்த நண்பன் அரவிந்த் நினைவாகவும் இப்பாடலுக்கு அந்த பெயரை தேர்ந்தெடுத்தேன்.

ஒரு ட்விட்டுக்கு இரண்டாயிரம், ஒரு ரீல்சுக்கு நான்காயிரம், ஒரு நடனத்திற்கு பத்தாயிரம்... கடவுளுக்காகவாவது இந்த போக்கை நிறுத்துங்கள்.

அரவிந்த் வெறும் ஒரு தற்காலிக வைரல் சென்சேஷனாக மாறிவிடாமல், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com