

நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், பந்தயக் களத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆவணப் படம் "Gladiators - In Pursuit of Challenges". 90 நிமிட ஆவணப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்.எல்.சி இப்படத்தை தயாரிக்கிறது.
துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சுற்றுகளில் (Asian Le Mans & 24H Series) அஜித் குமார் மற்றும் அவரது அணியினர் பங்கேற்ற தருணங்களை நேரடிப் பதிவுகளாக இந்தப் படம் படம்பிடித்துள்ளது.
ரேசிங் களத்தில் அஜித் சந்தித்த தடைகள், பின்னடைவுகள், மற்றும் 2025 துபாய் 24H பந்தயத்தில் அவர் வென்ற போடியம் சாதனை வரை முழுமையான சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் அனுபவங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட சர்வதேச பந்தய வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆவணப்படம் 90 நிமிடங்களாக இருந்தாலும், இது உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.