என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன் - அஜித்

கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன்.
என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன் - அஜித்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங் வீரரும் ஆவார். சர்வதேச அளவில் பல கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெற்றும் உள்ளார்.

கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்த அவர் அண்மைக் காலமாக சினிமாவுக்கு இடைவெளி விட்டுவிட்டு கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிரான்சில் நடைபெற இருக்கும் கார் ரேசிங்கிற்கு அஜித் குமார் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மே 30 அஜித்தின் தாயார் மோகினி சென்னையில் காலமானார். துபாயில் இருந்து கிளம்பி வந்து தாயார் இறுதிச்சடங்குகளை அஜித்குமார் செய்து முடித்தார்.

இந்நிலையில், அஜித்குமார் சமீபத்திய பேட்டியில் தனது கார் பந்தயத் திட்டம் குறித்து பேசியுள்ளார்.

அதில் " எனது ‘ரெடான்ட்’ அணி மிகச்சிறந்த குழுவாகச் செயல்பட்டு வருகிறோம். இவர்களுடன் இருப்பது எனது இரண்டாவது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். எனது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர்.

கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய கடமைகள் இருப்பதால், தற்போதைய பந்தயக் காலங்களில் ஐரோப்பாவில் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறேன்.

அடுத்த ஆண்டு ‘ஏசியன் லெ மான்ஸ்’ மற்றும் ‘இ.எல்.எம்.எஸ்’ ஆகிய தொடர்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளோம்.

என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டு கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com