சிவராஜ் குமார் படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

முதற்கட்ட படப்பிடிப்பு பிஜப்பூர் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ரோஹித் பதகி இயக்கி வருகிறார்.
சிவராஜ் குமார் படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'உத்தரகாண்டா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் 'உத்தரகாண்டா' படத்தில் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட், கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com