திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம்

நடிகை சாய் பல்லவி கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை நேரில் கண்டு உற்சாகம் அடைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம்
Published on

பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

சிறப்பு பூஜை

கோவிலுக்கு எளிமையான முறையில் வருகை தந்த சாய் பல்லவி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து மனமுருகி வழிபட்டார்.

ரசிகர்கள் உற்சாகம்

கோவிலுக்கு சாய் பல்லவி வருகை தந்த தகவலை அறிந்ததும், அங்கு வந்திருந்த பக்தர்களும், ரசிகர்களும் அவரைக் காண திரண்டனர். தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரை நேரில் கண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து கோ-பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com