"சாதி, மதம் எல்லாம் பிறப்பால் வந்தவை": சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகை மீனாவின் பதிவு!

இந்த மனிதநேயப் பண்பிற்குப் பல்வேறு தரப்பு ரசிகர்களும் இணையவாசிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 Meena
Meena
Published on

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை மீனா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து அடங்கிய ஸ்டோரி தற்பொழுது இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

மீனாவின் பதிவு:

இதுகுறித்து நடிகை மீனா தனது பதிவில், "உங்கள் சாதி, மதம், பிறந்த இடம் மற்றும் பாலினம் ஆகியவை அனைத்தும் பிறப்பால் அமைந்தவை. அவற்றைப் பெறுவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை; எனவே, அவற்றைக் குறித்துப் பெருமைப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் குணம், உங்கள் செயல்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மனிதாபிமானம் ஆகியவற்றைக் குறித்துப் பெருமை கொள்ளுங்கள்" என்ற செய்தியை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

ஆதரவு:

சாதி மற்றும் மதப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கும் அவரது இந்த மனிதநேயப் பண்பிற்குப் பல்வேறு தரப்பு ரசிகர்களும் இணையவாசிகளும் தங்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தளத்தில் பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com