சென்னையில் நாளை தியேட்டர்கள் வழக்கம்போல் இயங்கும்: அபிராமி ராமநாதன்

நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவது இல்லை என்றும், சென்னையில் உள்ள தியேட்டர்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்றும் அபிராமி ராமநாதன் கூறியிருக்கிறார்.
சென்னையில் நாளை தியேட்டர்கள் வழக்கம்போல் இயங்கும்: அபிராமி ராமநாதன்
Published on

இதற்கிடையே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களும் 8 சதவீத கேளிக்கை வரிவிதிப்பு, திரையரங்கு உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அபிராமி ராமநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாளை வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் இயங்கும். மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கும். 147 தியேட்டர்களில் படங்கள் ஓடும். இந்த தியேட்டர்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் திரையிடப்படும்’ என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com