பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்

சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்
Published on

இந்நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி அதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு கடந்த வாரம் அனுப்பி இருந்தார்.

ஆனால் திடீர் திருப்பமாக சான்றிதழ் விண்ணப்பத்தில் குறைகள் இருப்பதாக கூறி அந்த விண்ணப்பத்தை இயக்குனருக்கு சான்றிதழ் வாரியம் திருப்பி அனுப்பி உள்ளது. ஆனால் அதில் என்ன குறை என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com