ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... அஜித் ரசிகர்கள் மீது வழக்கு

ஊரடங்கு உத்தரவை மீறி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜித்
அஜித்
Published on

கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே தியாகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அஜித் ரசிகர்களான ராஜேஸ், ஆகாஷ், விஜயகுமார், மணி ஆகிய 4 பேர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தியாகசமுத்திரம் வயல் திடலில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று கேக் வெட்டியதோடு மட்டுமல்லாமல், பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் இதனை முகநூலில் வெளியிட்டுள்ளனர். 

தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி அஜித்குமார் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அஜித் கூறியிருந்தபோதும், அதைமீறி அவரது ரசிகர்களின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com