இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: சன்னிலியோன்

மனைவிகள் மிரட்டுவதால் இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள் என்று கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தெரிவித்திருக்கிறார்.
இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: சன்னிலியோன்
Published on

“இந்தி நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த நடிகர்களை அவர்களுடைய மனைவிமார்கள் மிரட்டி வைத்திருப்பதுதான் என்று கேள்விப்படுகிறேன். அவர்களிடம் உங்கள் கணவர்கள் எனக்கு தேவை இல்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனக்கு தங்கமான கணவர் இருக்கிறார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் என் தேவைகள் அனைத்தையும் முழுமையாக, திருப்திகரமாக நிறைவேற்றுகிறார். எனக்கு யாருடைய புரு‌ஷனும் தேவை இல்லை. எனக்கு நடிக்க வேண்டும். அவ்வளவு தான். நான் சேர்ந்து பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களிடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

என்றாலும், ஷாருக்கானின் ‘ரபீஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று அழைத்தார்கள். ராங் நம்பரை அழைத்து விட்டார்களோ என்று முதலில் நினைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்து ஷாருக்கான் என்னுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com