என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்ற ரித்விகா, தன்னை ஆதரித்த அனைவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #BiggBossTamil2 #Riythvika
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
Published on

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் முடிந்தது.

இதில், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார். இந்த நிலையில் ஒருவார இடைவேளைக்கு பிறகு ரித்விகா, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

எல்லாருக்கும் வணக்கம். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, நிறைய பேர் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிருக்கீங்க. நான் வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. ரித்விகா பேன்ஸ், ரித்விகா ஆர்மி என நிறைய கணக்குகளை தொடங்கி எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறீர்கள். இந்த ஒரு வாரம் நான் நேரம் எடுத்துக் கொண்டேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதனால் தான் இந்த வீடியோவை தாமதமாக வெளியிடுகிறேன். 

விரைவில் சமூக வலைதளங்களில் உங்களை நேரலையில் கலந்துரையாடுகிறேன். அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவளியுங்கள்.

இவ்வாறு ரித்விகா கூறினார். #BiggBossTamil2 #Riythvika

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com