மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? : மிரளும் கஞ்சா கருப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு மீண்டும் அந்த வீட்டுக்கு செல்வாரா என்று கேட்டதற்கு மிரண்டு பதில் கூறியிருக்கிறார்.
மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? : மிரளும் கஞ்சா கருப்பு
Published on

கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் கஞ்சா கருப்பு. அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார் கஞ்சா கருப்பு.

தற்போது ‘சந்தனத்தேவன்’, ‘அருவா சண்ட’, ‘கிடா விருந்து’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ படம் ரிலீசாக இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகதுப்பா” என சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com