`தங்கல்' படத்தின் வசூலுக்கு ஈடுகொடுக்க `பாகுபலி-2' படக்குழுவின் புதிய திட்டம்

சீனாவில் வசூலைக் குவித்து வரும் `தங்கல்' படத்தின் வசூலுக்கு போட்டியாக `பாகுபலி-2' படக்குழு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
`தங்கல்' படத்தின் வசூலுக்கு ஈடுகொடுக்க `பாகுபலி-2' படக்குழுவின் புதிய திட்டம்
Published on

வசூலில் இந்திய சினிமாவை பாலிவுட் படங்கள் ஆட்சி செய்து வந்த நிலையில், தென்னிந்திய திரைப்படம் ஒன்று உலகலவில் வசூல் சாதனை படைத்து, பேசப்படும் படமாக உருவெடுத்திருப்பதற்கு காரணமானவர் ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்நிலையில், `பாகுபலி-2' -வின் வசூலுக்கு போட்டியாக அமீர்கானின் `தங்கல்' படம் 2 வாரங்களுக்கு முன்பு சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட `தங்கல்' சீனாவில் மட்டும் ரூ. 700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு சீனாவில் வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூல் சாதனையையும் `தங்கல்'முறியடித்துள்ளது.

`பாகுபலி-2'  படத்தை தொடர்ந்து வசூலில் படமும் வசூலில் வரலாற்றை திருப்பி எழுதி வருகிறது. உலகம் முழுவதும் சாதனை படைத்து வரும் `தங்கல்'  வசூலில் ரூ.1500 கோடிக்கு நெருக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே `பாகுபலி-2' -ன் வசூலை இன்னும் சிலநாளில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் `தங்கல்' படத்தின் வசூல் சாதனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக `பாகுபலி-2' படத்தை சீனாவில் திரையிட முடிவு செய்துள்ள படக்குழு, அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி படத்தை வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com