கதை கேட்காமல் நடித்தேன்- ஆர்யா

சாந்தகுமார் இயக்கியுள்ள ‘மகாமுனி படத்தில் கதை கேட்காமல் நடித்ததாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஆர்யா
ஆர்யா
Published on

ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மகாமுனி. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மகிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

ஆர்யா பேசியதாவது:- ’சாந்தகுமாரிடம் ‘இந்த படத்தின் கதையை தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?’ என்று கேட்டேன். அதுக்கு அவர் படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன். அந்த பைக்லயே இந்தியாவை சுத்தி பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப்போறேன்’னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்.

நீங்க அடுத்து பிளைட்டுதான் சார் வாங்கணும்’னு சொன்னேன். இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா’ கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார். பிறகு ‘முனி’ கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com