சூர்யா படத்தில் ஆர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

`என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். #Suriya37 #KVAnand
சூர்யா படத்தில் ஆர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

`என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் லண்டனில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. படம் அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் திரைக்கு வர இருக்கிறது. #Suriya37 #KVAnand

X

Maalai Malar
www.maalaimalar.com