அருள்நிதியுடன் நான்காவது முறையாக இணைந்த பிரபலம்

`புகழேந்தி எனும் நான்' படத்தை தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் நான்காவது முறையாக இணையவிருக்கிறார். #Arulnidhi
அருள்நிதியுடன் நான்காவது முறையாக இணைந்த பிரபலம்
Published on

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இரவில் நடக்கும் மர்மங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

இந்த படத்தை முடித்த பிறகு அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் இணையவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார். 

இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக அருள்நதியுடன் டிமான்டி காலனி, ஆராது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Arulnidhi

X

Maalai Malar
www.maalaimalar.com