குறள் 146 மூலம் இயக்குனராகும் கலை இயக்குனர் உமா ஷங்கர்

கலை துறையில் கடந்து 16 வருடங்களாக பணியாற்றிய கலை இயக்குனர் ஆ.உமாஷங்கர் தற்போது குறள் 146 படம் மூலம் இயக்குனராகிறார்.
குறள் 146 மூலம் இயக்குனராகும் கலை இயக்குனர் உமா ஷங்கர்
Published on

கலை துறையில் கடந்து 16 வருடங்களாக பணியாற்றிய கலை இயக்குனர் ஆ.உமாஷங்கர் பல கட்டங்களை கடந்து இப்பொழுது இயக்குனராக தம் கலை பணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார்.

ஓம் ஸ்ரீ சாய் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆ.உமாஷங்கர் இயக்கிய ஈஷா குறும்படம் டெல்லி தாதா சாகிப் பால்கி 2017 விழாவில் சிறந்த படங்களுக்கான தனி தகுதி சான்றிதழ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1700 படங்களுக்கு மேற்பட்ட படங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதில் தமிழ்நாட்டில் இருந்து இப்படம் தேர்வு செய்யப்பட்டு அவ்விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இதில் பணியாற்றிய இசையமைப்பாளர் குரு கல்யான், ஒளிப்பதிவாளர் கிரிஷ்டோபர் ஜோசப், எடிட்டர் சாரதி ஆகியோருக்கும் சிறப்பு தனி தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் உமாஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் குருகல்யான் கூட்டணியில் இக்கதை குறள்-146 என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இதன் முதல் கட்ட பணியாக பாடல் பதிவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com