கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி

`தனி ஒருவன்' படத்திற்கு பிறகு பிசியாக நடித்து வரும் அரவிந்த்சாமி அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி
Published on

`தனி ஒருவன்' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியாகி விட்டார் நடிகர் அரவிந்த்சாமி. 

அவரது நடிப்பில் `சதுரங்கவேட்டை 2', `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', `நரகாசூரன்' உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் அரவிந்த் சாமி, செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி' நடித்து வருகிறார். 

இந்நிலையில், அரவிந்த் சாமி அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆக்ஷன் படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடத்தில் தானே படம் இயக்கப் போவதாக அரவிந்த்சாமி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com