`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி

`துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் `நரகாசூரன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அரவிந்த் சாமி, ஸ்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
Published on

இதில் `வணங்காமுடி' படத்தை செல்வா இயக்கி வருகிறார். இந்த படம் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் தனது காட்சிகளை முடித்த அரவிந்த் சாமி அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகா கலந்து கொண்டனர். இரண்டாவது மற்றும் கடைசி கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியா சரண் கலந்து கொண்டுள்ளனர்.

கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். படம் வருகிற பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com