அறம் இயக்குநருடன் கைகோர்த்த ஜெய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் - டேனியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Jai #DanielAnniePope
அறம் இயக்குநருடன் கைகோர்த்த ஜெய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார்.

அறம் 2 மூலம் கோபி நயினார் - நயன்தாரா மீண்டும் இணையவிருக்கின்றனர். அறம் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கிடையே கோபி தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். முன்னதாக இந்த கதையில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்யா இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை. வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை டேனியல் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து டேனியல் கூறியிருப்பதாவது, 

எனது அடுத்த படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி. அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. என்று குறிப்பிட்டுள்ளார். #Jai #DanielAnniePope #GopiNainar

X

Maalai Malar
www.maalaimalar.com