சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அறம் செய்து பழகு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இயக்குநர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
Published on

‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமா காதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதுகுறித்த தகவலை சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,

"இன்றுடன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி"

என்று பதிவு செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com