விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றருமான ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.
Published on

உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படம் உருவாக இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், டாக்டர் ராஜசேகர் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சுமார் ரூ.150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. பூஜை ஆரம்பமாகி படப்பிடிப்பு தொடங்காத நிலையில், ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரவிவர்மன் விலகினார். அவருக்கு பதிலாக ஆர்.ரத்னவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் படக்குழுவில் இருந்து விலகியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். அவருக்கு பதிலாக எஸ்.தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொனிதலா புரொடக்‌ஷன் கம்பெனி சார்பில் ராம்சரன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com