நானும் அவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம் - அபர்ணா முரளி

நானும் அவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம் என்று 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அபர்ணா முரளி கூறியுள்ளார். #AparnaMurali
நானும் அவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம் - அபர்ணா முரளி
Published on

8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அபர்ணா முரளி தற்போது ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தை பெரிதாக எதிர்பார்த்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பின் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கி உள்ள இந்தப் படம் டிசம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது. 

அபர்ணா முரளி அளித்துள்ள பேட்டியில், “வழக்கமான கதாநாயகிக்கான பாத்திரங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கவிரும்புகிறேன். ரசிகர்கள் நான் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் துணிச்சலுடன் செயல்படும் கதாபாத்திரமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. 

நான் காதல் படங்களில் நடித்ததில்லை. அது மிகவும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் பயோபிக் படங்களில் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக வெளியே தெரியாமல் போன புகழ்பெற்ற மனிதர்களின் கதைகளில் நடிக்க ஆசை. 

சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கீர்த்தி சுரேஷ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருந்தார். சர்வம்தாள மயம் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் நானும் ஜி.வியும் நண்பர்களாக மாறிவிட்டோம். ராஜிவ் மேனன் அவரது மனைவி லதா, மகள் சரஸ்வதி ஆகியோர் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருப்பதால் படக்குழு எனக்கு ஒரு குடும்பம் போல் இருந்தது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com