தோசைக் கல்லால் இயக்குநரின் நெற்றியை பதம்பார்த்த அஞ்சலி

ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘லிசா’ படப்பிடிப்பின் போது, தோசைக் கல்லை தூக்கி எறிந்து இயக்குநரின் நெற்றியை நடிகை அஞ்சலி பதம்பார்த்திருக்கிறார். #Lisaa #Anjali
தோசைக் கல்லால் இயக்குநரின் நெற்றியை பதம்பார்த்த அஞ்சலி
Published on

`காளி' ரிலீசுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் `பேரன்பு', `நாடோடிகள்-2' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். 

பிரபல ஒளிப்பதிவாளரும், ‘மதுரை வீரன்’ படத்தின் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு காட்சிப்படுத்தியது. அந்த காட்சியில் அஞ்சலி, தோசைக்கல்லை கேமராவை நோக்கி வீச வேண்டும். ஆனால், அஞ்சலி வீசிய தோசைக்கல் நேராக இயக்குநர் ராஜூ விஸ்வநாத்தின் நெற்றியை தாக்கி ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது. இதில் அவரது கண் அருகே புருவம் கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இயக்குநருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டது. 

இதனால் அன்று ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. ஏமாலி படத்தின் நாயகனான சாம் ஜோன்ஸ் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #Anjali #Lisaa

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com