மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?

பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள மக்களை கவர்ந்த 20 பிரபலங்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடத்திலும், இந்திய பிரியங்கா சோப்ரா இருபதுக்குள்ளும் இடம் பிடித்துள்ளார். #AngelinaJolie #PriyankaChopra
மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
Published on

சர்வதேச அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து ‘யூகோவ்’ என்ற நிறுவனம் ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. 35 நாடுகளில் 37 ஆயிரம் பேரிடம் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்மூலம் மக்களை கவர்ந்த 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அவர்களில் ஆண்கள் பிரிவில் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2-வது இடத்திலும், நடிகர் ஜாக்கிஜான், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடம் பிடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா, மற்றும் ஒப்ரா, வின்பிரே ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 12-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க டி.வி. தொடரிலும் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். #AngelinaJolie #PriyankaChopra

X

Maalai Malar
www.maalaimalar.com