சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு வாபஸ்

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு வாபஸ்
Published on

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சேர்ந்த ஜி.என்.அன்புசெழியன்(வயது 50) மீது குற்றம்சாட்டி, அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் அன்புசெழியன் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் இந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. பி.அசோக்குமாருக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடர்போ, மறைமுக தொடர்போ இல்லை. அசோக்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தரப்பு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. அன்புச்செழியன் மீது போலீசார் கந்துவட்டி வழக்கு பதிவுசெய்த நிலையில், அன்புச்செழியனின் வழக்கறிஞர் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com