‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில் படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்த அமலாபால்: சுசிகணேசன்

‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பின் போது நடிகை அமலாபால் திருட்டு பயலே படக்குழுவுக்கு திடீர் அதிர்ச்சியளியை கொடுத்ததாக படத்தின் இயக்குநர் சுசிகணேசன் கூறினார்.
‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில் படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்த அமலாபால்: சுசிகணேசன்
Published on

“ இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கின் உள்பகுதியில் நடந்தது. இது மலையும், கடலும் சார்ந்த பகுதி. இங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அமலாபாலுக்கு அவரது தந்தை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வந்தது. இதனால் அமலாபால் எங்களிடம் சொல்லாமல் ஊர் திரும்ப திட்டமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தோம்.

டவர் கிடைக்கும் இடத்தில் இருந்து பேசிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன அவர், தனது உதவியாளருடன் படகில் கிளம்பதயாரானார். இதை அறிந்த அமலாபாலுக்கு உதவியாக வருவதாக கூறி நானும், பாபிசிம்ஹா, பிரசன்னா ஆகியோரும் படகில் ஏறிக்கொண்டோம். டவர் கிடைத்த இடத்தில் இருந்து அவர் போனில் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com