சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 37-வது படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், படக்குழுவில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார். #Suriya37
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
Published on

`என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்ட பலரும் ஒப்பந்தமாகியுள்ளனர். 

கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேதி பிரச்சனையால் படக்குழுவில் இருந்து விலகுவதாக அல்லு சிரிஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அல்லு சிரிஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

`தற்போது தெலுங்கில் உருவாகும் ஏபிசிடி படத்தில் நடித்து வருகிறேன். இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடப்பதால் சூர்யா படத்தில் என்னால் இடம்பெற முடியவில்லை. படப்பிடிப்பை வேறு தேதியிலும் மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நானாகவே இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 

இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு எனது சூழ்நிலை புரியும். அவர் தனது முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்த குழுவுடன் பணியாற்ற விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். #Suriya37 #AlluSirish

X

Maalai Malar
www.maalaimalar.com