நண்பருக்கு கொரோனா தொற்று.. பேனர் வைத்து விழா கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

திருமண விழாவில் நண்பருக்கு கொரோனா தொற்று என்று பேனர் வைத்து அஜித் ரசிகர்கள் விழா கொண்டாடி இருக்கிறார்கள்.
அஜித்
அஜித்
Published on

அந்த பேனரில், மணமகன், மணமகள் என்று போடுவதற்கு பதிலாக ‘தொற்றானவர்’, ‘தொற்றி கொண்டவர்’ என்று தெரிவித்துள்ளனர். திருமண நாளை ‘தொற்று உறுதி செய்த நாள்’ என்றும், கல்யாணம் நடைபெறும் இடத்தை ‘தொற்று பரவிய இடம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்த்து பகுதியில், ‘நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவியுடன்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நண்பர்களின் பெயர்களுக்கு முன்பு சானிடைசர், விலகி இரு, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல், விழித்திரு, பாசிடிவ், முகக்கவசம், கோவிட், சுடுநீர் என்று கொரோனாவுடன் தொடர்புடைய அடைமொழியோடு அவர்களது பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இந்த திருமண பேனர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com