அக்னி தேவி பட விவகாரம் - பாபிசிம்ஹா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் புகார்

‘அக்னி தேவி’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #AgniDevi #BobbySimha
அக்னி தேவி பட விவகாரம் - பாபிசிம்ஹா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் புகார்
Published on

ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’.

இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா இயக்குனர் மற்றும் படக்குழு மீது பல்வேறு புகார்களை கூறினார். தான் ஏமாற்றப்பட்டதாகவும், டூப் வைத்து எடுத்த காட்சிகளை தன் காட்சிகள் என்று படத்தில் வைத்திருப்பதாகவும் கூறி வழக்கும் தொடர்ந்தார்.

மேலும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.பி.ஆர் என்கிற ஜான் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளாக எஸ்.எஸ்.துரைராஜ், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் இன்று கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

அதில் பாபிசிம்ஹா கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், அவரால் தான் படக்குழு கடுமையாக பாதிக்கப்பட்டது, போலீசார் ஜான் பால்ராஜுக்கு எந்த நெருக்கடியும் தராமல் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AgniDevi #BobbySimha

X

Maalai Malar
www.maalaimalar.com