சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணையும் இயக்குநர்

நடிகர் சூர்யாவை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணையும் இயக்குநர்
Published on

அதனைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். காமெடி பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடக்கத்திலேயே இப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து `தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com