போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு - நடிகை சஞ்சனா கல்ராணி கைது

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சஞ்சனா கல்ராணியை போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்கின்றனர்
சஞ்சனா கல்ராணியை போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்கின்றனர்
Published on

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும், பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். 

இது தொடர்பாக 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com