

இப்படத்தின் கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் என்பவர் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். இந்நிலையில், முதல் படத்திலேயே முன்னணி நடிகைபோல் இவர் பந்தா காட்டுவதாக படக்குழுவினர் நடிகையை பற்றி குறைகூறியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஒரு காட்சிக்கு இந்த உடைதான் பொருத்தமாக இருக்கும், அதை உடுத்தி வாருங்கள் என்று நடிகையிடம் சொன்னால், பதிலுக்கு அவரோ, அந்த உடைகள் எல்லாம் அணியமுடியாது. எனக்கேற்றார்போல் உடையணிந்துதான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பாராம்.
தற்போது படம் முடிந்து படக்குழுவினர் அனைவரும் படத்தை புரோமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், நடிகையை புரோமோஷனுக்கு அழைத்தபோது, அவர் முன்னணி நடிகைகளைப் போல் புரோமோஷனுக்கெல்லாம் வரமுடியாது என கறாராக சொல்லிவிட்டாராம். இதனால், படக்குழுவினர் ரொம்பவும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.