திருப்பி அடிக்கத்தெரியாம இல்ல, அடிச்சா தாங்க மாட்டிங்க - எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சவுந்தர்ராஜா

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினலர் கோஷமிட்டதை குறிப்பிட்டு விமர்சனம் செய்த எச்.ராஜாவுக்கு நடிகர் சவுந்தர்ராஜா பதிலடி கொடுத்துள்ளார். #HRaja
திருப்பி அடிக்கத்தெரியாம இல்ல, அடிச்சா தாங்க மாட்டிங்க - எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சவுந்தர்ராஜா
Published on

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பிலும் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் முடிவில் பேசிய நடிகர் சத்யராஜ், இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம் என்றார். 

அதனைத்தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்ட அன்றும், தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர்கொள்ள தயங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ.கௌதமன், வெற்றிமாறன், ஆர்.கே.செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியோரோடு நடிகர் ஆரி, சௌந்தர்ராஜாவும் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில், இதனை கொச்சைப்படுத்தும் விதமாக, சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பி கொண்டிருந்த ஒரு புகைப்படத்தை குறிப்பிட்டு எச்.ராஜா அவரது டுவீட்டர் பக்கத்தில், இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம் என கிண்டல் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த சௌந்தர்ராஜா, 

`என்ன சொல்ல, இது மெரினா போராட்டக் களத்தில் எடுத்த புகைப்படம் பெண்களை, குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்று கேட்டபோது. உங்க திறமை கண்டு வியக்கிறேன். வாழ்க  ஜனநாயகம், திருப்பி அடிக்கத்தெரியாம இல்ல அடிச்சா தாங்க மாட்டிங்க. வன்முறை தவறு. அதனால் பொறுமை காத்தோம், மனிதநேயத்துடன். என்று குறிப்பிட்டுள்ளார். #HRaja #CauveryManagementBoard

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com