பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜர்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜர்
Published on

இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யை எழுப்பினர். அப்போது போதையில் ஜெய் காரை ஓட்டிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுதியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜெய் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஜெய் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று காலை நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com