குடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம்: ராஷி கண்ணா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணா தற்போது பிசியாக நடித்து வருவதால் குடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம் என்று கூறியிருக்கிறாராம்.
குடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம்: ராஷி கண்ணா
Published on

தெலுங்கில் நடித்து வந்த நடிகை ராசி கண்ணா தற்போது தமிழில் அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’, சித்தார்த்தின் ‘சைத்தான் கா பச்சா’ படங்களில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய ராசி கண்ணா...

“தற்போது தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கு உள்பட வேறு சில மொழி படங்களிலும் நடிக்கிறேன். பிசியாக இருப்பதால் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை.

இடையில் சில காலம் ஓய்வில் இருந்தேன். இப்போது முழு வேகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பலமொழிகளில் நடிப்பது கடினமான வி‌ஷயம். என்றாலும், அதுபற்றி கவலைப்படுவது இல்லை. அதை சவாலாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் நடிக்கிறேன். எல்லா நடிகைகளும் இதுபோன்ற மகிழ்ச்சியை தான் விரும்புகிறார்கள். அது இப்போது எனக்கு கைகூடி வந்திருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com