ஆயிரத்தில் இருவருக்கு விடிவு காலம் வந்தாச்சு

வெற்றி பட இயக்குனர் சரண் இயக்கத்தில் வினய் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த ‘ஆயிரத்தில் இருவர்’ படத்திற்கு விடிவு காலம் வந்துள்ளது.
ஆயிரத்தில் இருவருக்கு விடிவு காலம் வந்தாச்சு
Published on
அஜித்தை வைத்து ‘காதல் மன்னன்’, ‘அமர்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ உள்ளிட்ட படங்களையும், விக்ரமை வைத்து ‘ஜெமினி’, கமலை வைத்து ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படங்களையும் இயக்கியவர் சரண். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இதில் கதாநாயகனாக வினய், கதாநாயகிகளாக சமுத்ரிகா, ஸ்வஸ்திகா நடித்துள்ளனர். மேலும் மயில்சாமி, இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல பிரச்சனைகளுக்கு நடுவே படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதையடுத்து நீண்டகாலமாக கிடப்பில் இருந்த இப்படத்திற்கு தற்போது விடிவு காலம் வந்துள்ளது.

வரும் செப்டம்பர் 22ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். வினய் வில்லனாக நடித்த ‘துப்பறிவாளன்’ படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், வினய்யின் அடுத்த படமும் வெளியாவது அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
X

Maalai Malar
www.maalaimalar.com