ஆறடி
இதில் நாயகனாக விஜய்ராஜ், நாயகியாக தீபிகா நடிக்கிறார்கள். இவர்களுடன் டாம் பிரான்கோ, ஜீவிதா, சாப்ளின்பாலு, பெஞ்சமின், சுப்புராஜ், ஜெயமணி, சுமதி, சிபி, தினேஷ் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு - விஜயன், இசை - அபி ஜோஜோ, படத்தொகுப்பு - காளிதாஸ், கலை - எஸ்.நவீன்குமார், கதை, திரைக்கதை, வசனம் - எம்.சக்திவேல், இயக்கம் - ஜே.சந்தோஷ்குமார். இவர் பல்வேறு குறும்படங்களை இயக்கி விருது பெற்றவர். ‘ஆறடி’ படத்தின் மூலம் திரை உலகில் இயக்குனராகிறார்.
“இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சுடுகாட்டில் ஒரு பெண் வெட்டியான் வேலை பார்க்கிறார். அவராகவே விரும்பி அந்த வேலைக்கு சென்றாரா? இல்லை சமூகம் அங்கு தள்ளியதா? இதை அறிய பத்திரிகையாளரான நாயகன் பேட்டி எடுக்க செல்கிறான். அங்கு அவனுக்கு கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதை கதைக்களமாக கொண்டு உருவாகும் படம் ‘ஆறடி’.

