இயக்குனர் சொன்னதை நம்பி 9 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தேன்: ஸ்ரேயா ரெட்டி

இயக்குனர் சொன்னதை நம்பி 9 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்ததாக `திமிரு' படத்தில் நடித்திருந்த ஸ்ரேயா ரெட்டி கூறியிருக்கிறார்.
இயக்குனர் சொன்னதை நம்பி 9 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தேன்: ஸ்ரேயா ரெட்டி
Published on

இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இத்துடன் ஜேஎஸ்கே பிலிம்ஸ் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா வையும் கொண்டாடினார்கள். விழாவில் பேசிய ஸ்ரேயா ரெட்டி...

“ இது 9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம். இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம், நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளியே வந்திருக்காது” என்றார்.

இயக்குனம் ராம், “எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டையும் வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை. அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com